About Me

My photo
00000000000000000000000000000000

Friday, November 25, 2011

நன்னாரி - HEMIDESMUS INDICUS

நன்னாரி - HEMIDESMUS INDICUS

நல்ல நாற்றம்  உடையதால் நன்னாரி ஆனது போலும். நன்னாரி வேர் ஒரு நறுமணம் தரும் பொருள் .அதே சமயம் அதிக மருத்துவகுணங்களும் கொண்டது. இதை மருத்துவ நூல்களில் கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி என்றும் அழைக்கப்படுகிறது .. இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது்.
இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும்.

மாவலி கிழங்கு என மலை பிரதேசங்களில் இருந்து ஒருவகை  கிழங்கு  கொண்டுவந்து விற்ப்பார்கள் .
அதில் ஒருவித ஊறுகாய் செய்து  வெகுவாக பயன்படுத்துவார்கள் .அதுவும் ஒருவகை பெரு நன்னாரி என்னும் வகையின் வேர் ஆகும்.

தாவரப்பெயர் - HEMIDESMUS INDICUS.
குடும்பம் - ASCLEPIADACEAE.
இதன் வகை பலவகை உண்டு - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.
இது  இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம்  கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும்.

சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தை தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.

முக்கியமாக மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
இதுவரை சரிவர பயன்படுத்தப்பாடதது .இதன் வேரை தொடர்ந்து பயன் படுத்தினால் எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பலாம்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து கால் லிட்டர் . பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, , மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள்  தொடர்ந்து சாப்பிட  நரை மாறும்.

பச்சைவேரை சிறிது இடித்து   நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வரப் , , நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும்.    ஆனால் பத்தியம்  மிக அவசியம்.

ஆண்மை பெருக நன்னாரி வேர் ஊறிய நீரை  இளஞ்  சூடாக அருந்தி வரவேண்டும். . இது ஒரு இயற்க்கை  தரும் டானிக் உடல் தேற்றி ! கண்டவற்றை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட நன்னாரி வேர் நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும்  நிற்கும்.

பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,இதுவே மாவலி அல்லது மாகாளி  ஊறுகாய் எனப்படும். சித்தமருத்துவத்தில் நன்னாரி  லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்
கோடைக்காலம் வந்து விட்டால் நா வரச்சியை  தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது  .இது உடலின் உள் வெப்பத்தை தணிப்பது .ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை பருகினால் உடலுக்கும் மனதிற்கும் குளுகுளு .
காசிற்க்கும் கேடில்லை.

தமிழக அரசின் டாம்ப்கால்' நிறுவனம் துளசி, நன்னாரி, அதிமதுரம் கலந்த மூலிகை குடிநீரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

நல்ல வியாபாரம் செய்யப் பார்த்திருப்பவர்களுக்கு நன்னாரி குடிநீர் நல்ல ஒரு வாய்ப்பு !


 

No comments:

Post a Comment