வாழ்க்கை என்பது பற்றற்று இருக்க வேண்டுமென்பதற்கு ‘அகப்பற்று
நீக்கல்’களாகச் சில பழமொழிகளை உதாரணங்களாகக் கூறுகின்றார்
பாம்பாட்டி.

“தாமரையிலை யினிலே தண்ணீர்தங்காத்
தன்மை போல”
தன்மை போல”
தண்ணீரிலே இருந்தாலும் தாமரை இலையிலே தண்ணீர் தங்காத்
தன்மை போல ஆசாபாசங்கள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையிலே
வாழ்ந்துங்கூட ஆசாபாசங்கள் பாதிக்கப்படாதவாறு வாழ்க்கையை அமைத்துக்
கொண்டு இறைவன் ஒருவனே நித்தியமானவன் என்பதை உணர வேண்டும்
என்கிறார்.
சேற்றிற் றிரிபிள்ளைபூச்சி சேற்றை நீக்கல்போல்
பிள்ளைப் பூச்சியானது சேற்றினில் இருந்தாலும் அதன்மேல் ஏதும்
சேறு ஒட்டிக்கொள்ளாமல் வாழ்வது போல நாமும் உலக இச்சைகளின் மேல்
பற்று வைக்காமல் தேசத்தாரோடு ஒத்து வாழ்தல் வேண்டும் என்றும்,
எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லாவாறு போல்
தண்ணீருக்குள் என்னதான் எண்ணெயை இரண்டறக் கலந்து விட்டாலும்
அது அதனுள் ஐக்கியமாகாது. அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாது தனியே
மிதப்பது போல உலக ஆசாபாசங்களில் மூழ்காது தனித்திருத்தல் வேண்டும்
என்கிறார்.
இன்னும்,
“சொல்லும் புளியம்பழத்தி னோடு போலீவ”
என்ற உதாரண முகத்தான் எத்தனை சொந்தங்கள் நமக்குத் துணை
நின்றாலும் அவையெல்லாம் உண்மையான சொந்தங்கள் அல்ல என்றும்
இறைவன் ஒருவனே நம்முடைய உண்மையான சொந்தம் என்றும் உணர்ந்து
மேல் ஓட்டினுள் ஒட்டாத புளியம் பழம் போல வாழ்க்கை நடத்த வேண்டும்
என்று பாம்பாட்டிச் சித்தர் அறிவுரை கூறுகின்றார்.
இவை போல இன்னும் சில பழமொழிகள் ஆழ்ந்த கருத்துடையனவாய்
இவர் பாடல்களில் பின்னிப் பிணைந்துள்ளன.
‘தேனில் விழுந்த ஈயைப் போல’ (81)
‘ஏட்டுச் சுரைக்காய்க் கறிக் கெய்திடாது போல்’ (94)
‘காந்தம் வலி இரும்பு போல்’ (91)
‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி’ (92)
‘கண்டவர்கள் ஒருகாலும் விண்டிலர்
விண்டவர் ஒருகாலும் கண்டிலர்’ (105)
‘உள்ளங் கையிற் கனிபோல’ (12)
இவர் பாடலில் எல்லாப் பாடல்களுமே ஆடு பாம்பே என்று முடிவதற்கு
செத்த பாம்பை ஆட்டுவித்து தத்துவங்களைச் சொன்னதுடன் இன்னொரு
காரணமும் கூறப்படுகிறது. குண்டலினியாகிய பாம்பை இவர் ஆட்டுவித்து
இறை இன்பம் காணுதலால் ஆடுபாம்பே என்று குண்டலினியை
முன்னிலைப்படுத்திய சித்தர் பாடல்கள் இவையென்றும் சிறப்பிக்கப்படுகின்றன.
பாம்பின் முழு ஆட்டத்தைப் பாடல்களில் தொடர்ந்து காணலாம்.

No comments:
Post a Comment